வீட்டோடு ஒதுங்க விரும்புகின்றார் தவராசா!


அரசியல் அரங்கில் தனித்துவிடப்பட்டிருக்கும் வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அரசியலில் நிரந்தர ஓய்வு பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளார்.

அரசியலிற்குச் சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு ஆஸ்திரேலியா வந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள அவர் இது அரசியலிலிற்கு நிரந்தர ஓய்வு கொடுப்பதற்கு ஓர் ஒத்திகையாகவும் இருக்கலாமெனவும் சூசகமாகத்தெரிவித்துள்ளார்.


மெல்பர்னில் தனது பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவளிப்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கின்ற அவர் வடமாகாணசபையின் ஆயட்காலம் முடிவுக்கு வருகின்ற நிலையில் நிரந்தர ஓய்விற்கு செல்வது பற்றி பேசியுள்ளார்.


முன்னாள் புளொட் அமைப்பின் பிரபலமான தவராசா பின்னதாக ஈபிடிபியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தார்.

மாகாணசபை தேர்தலில் அதிர்ஸ்டம் கதவை தட்டிய நிலையில் டக்ளஸ் தரப்புடன் முரண்பட்டு கதிரையேறிய அவர் கட்சியின் கொழும்பு தலைமையக காணி விற்பனையில் தன்பங்காக பெருந்தொகையினை பெற்று கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.

வடமாகாண முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் தமிழரசு தரப்புடன் இணங்கி செயற்பட்டதன் மூலம் அக்கட்சியில் தனக்கான இடத்தை பெற அவர் முற்பட்டிருந்தார்.

எனினும் உட்கட்சி குழறுபடிகளால் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வந்த அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானமே திண்டாடும் நிலையில் அதுவும் சரிவராதென ஒதுங்க தற்போது தவராசா விரும்பியுள்ளார்.

ஏற்கனவே போதைபொருளிற்கு அடிமையான மகன் விவகாரம் என குடும்ப நெருக்கடிகளும் தொடர்வதால் ஒதுங்கியிருந்து குடும்பத்தை பார்க்க அவர் முற்பட்டுள்ளார். 

No comments