கூட்டமைப்பே இல்லை:அதற்கு முதலமைச்சர் வேட்பாளரா?


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று ஒன்று இல்லாத நிலையில் அதன் முதலமைச்சர் வேட்பாளரென்ற கதை கேலிக்குரியதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தங்களை நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்குந் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்கப் பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

வடகிழக்குக் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும். அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் நாம் வாக்குக் கேட்டோம்.   மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர். 

அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா?   இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் தமிழரசுக்கட்சி பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாணசபைக்கான கூட்டமைப்பின் அடுத்து வேட்பாளர் விக்கினேஸ்வரன் அல்லவென தெரிவித்திருந்த நிலையில் அதற்கு சுமந்திரன் கூட்டமைப்பே இல்லையேயென பதிலளித்துள்ளார்.
  

No comments