வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள மின் உற்பத்தி


நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, செயற்பாடுகள் வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இந்த மின் உற்பத்தி இயந்திரத்தின் குளிரூட்டல் தொகுதியில் கடந்த 2 ஆம் திகதி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
 
இந்தநிலையில், பொறியியலாளர்களினால் குறித்து தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 
நுரைச்சோலையில் அனல் மின் நிலைய இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோதும், அது பாரியளவானதாக அமையவில்லை என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார வடுகே தெரிவித்துள்ளார்.
 
பாரியளவான கோளாறாக ஏற்பட்டு 2, 3 நாட்களுக்கு திருத்தப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய நிலைமை இருந்திருந்தால், மின்சார துண்டிப்பை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நீர் மின்சாரத்தை ஒரு நாளைக்கு 15 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
அதற்கு அதிகமாக தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாது.
 
நுரைச்சோலையில் கோளாறு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் நீரை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பெற்றுக்கொண்டு ஒரு நாளைக்கு முகாமைத்துவம் செய்யப்பட்டது.
 
எவ்வாறிருப்பினும், நுரைச்சோலை அனல் மின் நிலைய இயந்திரக் கோளாரை சரிசெய்ய முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

No comments