துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் காயம்


ஈதுருவ - அதுருவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த சிலர் மீது உந்துருளியில் பயணித்துள்ள இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கி பிரயோகத்தின்போது காயமடைந்த மொஹம்மட் இஸ்மயில் எனும் நபர் நுகேகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மற்றைய நபருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கொஸ்கொடை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது

No comments