கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணக்கம்!


கர­வெட்டி மற்­றும் வவு­னியா வடக்­குப் பிரதேச சபை­க­ளில் சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக - இந்த இரண்டு சபை­க­ளி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைப்­ப­தற்கு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி ஆத­ரவு வழங்­கும் என்று கூறப்படுகிறது. ‘தமி­ழர் மண்­ணில் பேரி­ன­வாத கட்­சி­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்­டோம். அவ்­வா­றான சூழல் ஏதா­வது சபை­க­ளில் உரு­வா­னால் அந்த இடத்தில் தமி­ழர்­கள் ஆட்சி அமைப்­பதற்கே ஆத­ர­வ­ளிப்­போம். அது ஒரு­வேளை கூட்­ட­மைப்பாக இருந்­தா­லும் தமிழ்த் தேசத்­தின் நலன் கருதி ஆத­ர­வ­ளிப்­போம்’ என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பேச்­சா­ளர் வி.மணி­வண்­ணன் தெரி­வித்­துள்­ளார். யாழ்ப்­பா­ணத்­தின் கர­வெட்டி பிர­தேச சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு 9 ஆச­னங்­க­ளும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் தலா 7 ஆச­னங்­க­ளும், ஈழ மக்­கள் ஜன­நா­ய­கக் கட்சி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணிக்கு தலா 3 ஆச­னங்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்சிக்கு 2 ஆச­னங்­க­ளும் உள்­ளது. கர­வெட்டி பிர­தேச சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி முயற்­சித்து வரு­கின்­றது. ஏனைய கட்­சி­க­ளு­டன் பேச்­சுக்­க­ளை­யும் நடத்தி வரு­கின்­றது. இதே­வேளை, வவு­னியா மாவட்­டத்­தின் வவு­னியா வடக்­குப் பிர­தேச சபை­யின் 26 ஆச­னங்­க­ளில், 12 ஆச­னங்­கள் சிங்­கள உறுப்­பி­னர்­க­ளு­டை­யது. எஞ்­சிய 14 ஆச­னங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு 8 ஆச­னங்­க­ளும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்கு தலா 3 ஆச­னங்­க­ளும் உள்­ளன. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, தெற்கு கட்­சி­கள் ஆட்சி அமைப்­பதை தடுப்­ப­தற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­ட­னும் இணைந்து ஆட்சி அமைப்­ப­தற்கு தயார் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

No comments