இலங்கை தமிழரை நாடு கடத்த முயன்ற கனடிய குடிவரவு அதிகாரிக்கு 'குட்டு வைத்த' நீதிபதி!
கனடாவில் இருந்து இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் விடயம் தொடர்பாக, கனடிய குடிவரவு அதிகாரி ஒருவரை பிராந்திய நீதிபதி ஒருவர், கண்டித்துள்ளார். கனடாவில் இருந்து இலங்கை தமிழர் ஒருவரை நாடு கடத்தவிருந்தபோது அவருக்கு இலங்கையில் ஏற்படவுள்ள ஆபத்து குறித்து உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளவில்லை என்று கனேடிய நீதிபதி தெரிவித்துள்ளார்.
சுரேஸ் நாகராசா என்ற இலங்கையர் நாடு கடத்தப்பட்டிருந்தால், அவர் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கலாம். அவரின் உயிர் ஆபத்து தொடர்பில் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சமாதான நீதிவான் ஒருவரும் வழங்கியுள்ள கடிதத்தையும் கருத்திற்கொள்ளாது குடிவரவு அதிகாரி, இலங்கையரை நாடு கடத்த முயன்றதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்தே, குறித்த குடிவரவு அதிகாரியை கனேடிய நீதவான் கண்டித்துள்ளார் என கனடிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
Post a Comment