பிரான்சில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள் நினைவேந்தல்கள்

31.05.2015 அன்று பிரான்சில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் திரு சிவராஜா அவர்களின் குடும்பத்தினர் ஈகைச்சுடர் ஏற்றிவைக்க, 16.12.2011 அன்று பிரான்சில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் திரு. அன்ரனி பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினர் மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்களினால் சுடர்வணக்கமும், மலர்வணக்கமும் இடம் பெற்றது. அரங்க நிகழ்வுகளாக தமிழ்ச் சோலை மாணவிகளின் எழுச்சி நடனங்களும், அங்கயர்க்கன்னி இசைக்குழுவின் எழுச்சிப்பாடல்களும், பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் பேச்சு, மற்றும் கவிதை என்பன இடம் பெற்றன. சிறப்புரையினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள் ஆற்றியிருந்தார்.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் ஒலித்து இறுதியா அனைவரும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று உறுதி எடுத்தலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
Post a Comment