படையினர் வசம் இருந்த 25 வெளிச்ச எறிகணைகள் மீட்பு
முல்லைத்தீவு கேப்பாபுலவுப்பகுதியில் படையினர் வசம் இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் இருந்து 25 வெளிச்ச எறிகணைகள் (பராக்குண்டுகள்) மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்:-
கேப்பாபுலவு மேற்கு பகுதியில் உள்ள வீதி ஓராமாக விடுவிக்கப்பட்ட காணி பற்றைக்காட்டிற்குள் விறகு வெட்ட சென்ற நபர் ஒருவர் நிலத்தில் மறைந்து கிடந்த குண்டுகளை இனம் கண்டுள்ளார்.
இது தொடர்பில் குறிப்பிட்ட நபர் முள்ளியவளை காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முள்ளியவளை காவல்துறைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் அனுமதிகோரியுள்ள நிலையில் மாவட்ட நீதிமன்றில் அனுமதியுடன் சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த வெளிச்ச எறிகணைகள் வகையான குண்டுகளை மீட்டுள்ளார்.
81 எறிகணையைச் சேர்ந்த த குறித்த 25 வெளிச்ச எறிகணைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்றும் இவற்றை பாதுகாப்பான ஒருபகுதியில் வைத்து தகர்த்து அழிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளார்கள்.

Post a Comment