வீட்டுக் கதவில் தலைவர் பிரபாகரனின் உருவம்!
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். இவர் அண்மையில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அந்த வீட்டின் பிரதான நுழைவு வாயிலின் கதவில், பிரபாகரனின் உருவப்படத்தைச் செதுக்கியுள்ளார். அந்த உருவப் படத்துக்குக் கீழ் விடுதலைப் புலிகளின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இவரின் வீட்டுக்கான புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்தவர்கள், பிரபாகரனின் உருவப்படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். மகிழ்ச்சியுடன் சிலர் ஒளிப்படங்களும் எடுத்துச் சென்றனர் என்று சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
Post a Comment