உதயங்கவை ஒப்படைக்குமாறு இலங்கை பொலிஸ் வேண்டுகோள்

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் விசாரணை மேற்கொள்வதற்கு நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொலிஸார் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு விமானமொன்றைக் கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இந்நாட்டு நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதற்காக உதயங்கவை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் அந்நாட்டிடம் கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. 

No comments