இலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்?


வடக்கு இளைஞர்களை இராணுவத்தின் கூலித்தொழிலாளர்களாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி முற்பட்டுள்ளார்.

கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது.எனினும் தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாக உள்ளனர்.

தற்போதைய இளைஞர், யுவதிகள் இராணுவத்தை சிங்கள இராணுவம் என்று எண்ணாதீர்கள். இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான். எனவே வடக்கு இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்து நாட்டுக்குச் சேவையாற்ற முன் வரவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர்களை இணைப்பதை அரசு விரும்பவில்லை.ஆனால் சர்வதேசத்திடம் தமிழ் இளைஞர்களும் இராணுவத்தில் இருப்பதை காண்பிக்க அரசு விரும்புகின்றது.

முன்னதாக மஹிந்த அரசின் இறுதி காலத்தில் இதேநகர்வுகள் அப்போதைய இராணுவத்தளபதியாக தயாரட்ணநாயக்க என்பவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க முயற்சிகள் நடந்திருந்தன.
படைமுகாம்களில் கூலி தொழிலாளர்களாக,மேசன்,தச்சுவேலை மற்றும் மின் இணைப்பு வேலைகளிற்கென குறித்த ஆட்திரட்டல் நடந்திருந்தது.

சுமார் ஆயிரம் பேர் வரையில் அவ்வாறு இணைக்கப்பட்ட பின்னர் அவர்கள் உண்மையினை புரிந்து தப்பித்தோட தொடங்கினர். இந்நிலையில் அவர்களிற்கு கடன்கள் வழங்கப்பட்டு பிணையாளிகள் ஆக்கப்பட்டு சுமார் 150இற்கும் குறைவானவர்களையே வைத்திருக்க படைத்தலைமையால் முடிந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதே கூலி தொழிலாளர்களை பலாலி உள்ளிட்ட முகாம்களில் பணியாற்ற ஏதுவாக இணைக்க புதிய யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி முற்பட்டுள்ளார்.

ஆனால் அவர்களிற்கு தென்னை தோப்புகளில் வேலையென பலத்த பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதனை முன்னகர்த்த தரகர்களும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரச்சாரங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments