Header Shelvazug

http://shelvazug.com/

கிளிநொச்சியில் ரணில்! கரடிப்போக்கு விகாரையில் வழிபாடு!

கிளிநொச்சி அபிவிருத்திக் கூட்டத்தில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரசிங்க  கலந்துகொண்டுள்ளார்.

இன்று காலை கிளிநொச்சிக்குப் பயணித்துள்ள ரணில் விக்கிரசிங்க   கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்,  அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.