சம்பந்தனை பதவி துறக்க சொன்ன மனோ!

அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுங்களென இலங்கை எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிற்கு அரச அமைச்சர் மனோகணேசன் ஆலோசனை தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சந்தடிகளில் காணாமல் போயுள்ள புதிய அரசியலமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். பிரதமர் தலைமையிலான வழிகாட்டல் குழுவை மீண்டும் கூட்ட வேண்டும் என்று இரா.சம்பந்தனிடம், கடந்த வாரம் ஒரு நிகழ்வில் சந்தித்த போது, நான் சொல்ல, அவரும் “ஓம்..ஓம்..தம்பி” என்று பலமாக தலையாட்டி உடன்பட்டதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


 உண்மையில் அப்போது அவருக்கு நான் சொல்ல மறந்தது. “யூ.என்.பி-எஸ்.எல்.எப்.பி கட்சிகளின் அக்கப்போர் எங்கள் பிரச்சினை அல்ல. நமது முன்னுரிமை பட்டியலில் முதலிடம் இனப்பிரச்சினை. புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வில்லையென்றால், அந்த பதவி சும்மா ஒரு பக்க வாத்தியம்தான். ஆகவே புது அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். அப்புறமும் அது தொடர்ந்தால் அது பக்க வாத்திய ஊதல்தான் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

No comments