சபாநாயகரின் ஹெலியால் தடைப்பட்ட விளையாட்டு விழா!


சபாநாயகர் கரு ஜயசூரியவை ஏற்றி வந்த விமானப் படை ஹெலிகொப்டர் தரிந்து நின்றமையால், தாங்கள் ஏற்பாடு செய்திருந்த தமிழ்-சிங்கள புத்தாண்டு விளையாட்டு வி​ழா தடைப்பட்டு விட்டது என, மாத்தளையிலுள்ள சர்வதேச பாடசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாத்தளை நகர சபையினால் நிர்வகிக்கப்படும் எட்வட் விளையாட்டு மைதானத்தில், கடந்த சனிக்கிழமை புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்காக, பணம் செலுத்தி முன்கூட்டியே பதிவு செய்திருந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாத்தளை வீர மடுகல்லேயின் நினைவு தின வைபவத்தில் பங்கேற்பதற்காக, சபாநாயகர் கரு ஜயசூரிய ஹெலியில் வந்தார். அவர் பயணித்த ஹெலி, அந்த விளையாட்டு மைதானத்தில் சுமார் 4 மணிநேரம் தரித்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், கல்லூரியின் மாணவர்கள், பெற்றோர் மற்றும் நிர்வாகத்தினர் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர் என்று தெரிவித்த கல்லூரின் பணிப்பாளர் சட்டத்தரணி பிரசன்ன தர்மகீர்த்தி, நகரத்தில் இன்னும் சில, விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஹெலியை இறக்குவதற்கு இந்த மைதானத்தை தெரிவு செய்தமை கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.

No comments