பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு தடை!


பாடசாலை நேரத்தில்- காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் பாடாசலையின் ஊடாக இரு தடவையே தோற்ற முடியும். எனினும் தனிப்பட்ட முறையில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பரிட்சார்த்திகளுக்கு தோற்ற முடியும். உயர் கல்வி அமைச்சுதான் இதனை தீர்மானிக்கும். என்றாலும் வெள்ளம் உட்பட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் இரண்டாவது தோற்றிய போது அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து முடியும் . அத்துடன் தற்போது நாம் பாடசாலை ஆசிரியர்களின் பற்றாகுறை நிவர்த்தி செய்து வருகின்றோம். பல ஆசிரியர்கள‍ை இணைத்துள்ளோம். இந்நிலையில் தனியார் வகுப்புகள் குறித்து அவதானம் ச‍ெலுத்த வேண்டும். தனியார் வகுப்புகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாடசாலை மட்ட கல்வியை ஊக்குவிப்பதற்கு நாம் அவதானம் ச‍ெலுத்தியுள்ளோம். இதன்பிரகாரம் வார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கவுள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என்றார்.

No comments