யாழ். மாநகர சபையின் அனுமதியின்றி வீதியோரமாக அமைக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் நீதிமன்ற அனுமதியுடன் இடித்து அகற்றம்


யாழ்ப்பாண மாநகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானத்தை அகற்ற நீதிமன்று அனுமதி வழங்கியதை அடுத்து , மாநகர சபையினால் குறித்த கட்டுமானம் இடித்து அகற்றப்பட்டது 

யாழ்ப்பாணம் , பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்பாக வீதியோரமாக கட்டுமானம் ஒன்றினை உணவக உரிமையாளர் மேற்கொண்டிருந்தார். 

அதற்கான அனுமதி இல்லை எனவும், அதனை அகற்றுமாறும் மாநகர சபை உரிமையாளருக்கு அறிவித்த நிலையில் உரிமையாளர் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை

உரிமையாளருக்கு மாநகர சபை கொடுத்த காலக்கெடு நிறைவடைந்ததை அடுத்து ,அந்த கட்டுமானத்தை அகற்ற அனுமதி கோரி மாநகர சபை நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , கட்டுமானத்தை அகற்ற மாநகர சபைக்கு நீதிமன்று அனுமதியளித்ததை தொடர்ந்து கட்டுமானம் நேற்றைய தினம் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டுள்ளது. 

No comments