பலாலி வீதி அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்
யாழ்ப்பாணம் பலாலி வீதி நள்ளிரவு 12 மணி வரையில் திறந்திருக்கும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்
வசாவிளான் சந்தியில் இருந்து , பருத்தித்துறை - பொன்னாலை வீதி சந்தி வரையிலான பலாலி வீதியின் சுமார் 2 கிலோ மீற்றர் தூர வீதி , இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கின்றது.
குறித்த வீதி கடந்த 2 வருடங்களுக்கு முன் நேர கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்ட நிலையில் , இதுவரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பொதுமக்களின் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல், காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் பாதை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயம் ஊடாக செல்லும் குறித்த வீதியின் 2 கிலோ மீற்றர் தூர வீதியில் நடந்து செல்வதற்கோ , துவிச்சக்கர வண்டியில் செல்வதற்கோ அனுமதி இல்லை என்பதுடன் , வீதியில் வாகனங்களை தரித்து நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை குறித்த வீதி உள்ளிட்ட பலாலி கிழக்கு பகுதியினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து , தம்மை தமது காணிகளில் குடியேற்றுமாறு , பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி மற்றும் வசாவிளான் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment