கொடிகாமத்தில் உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி ,ஏ.கே. 47 ரவைகளுடன் இருவர் கைது


யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் 

கொடிகாம பொலிஸார், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை  வழிமறித்து சோதனையிட்டனர். 

 போது இருவரும் எடுத்து சென்ற உடமையை சோதனை செய்த போது, , ஏ.கே. 47 ரக துப்பாக்கி ரவைகள் 96 இணை மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து , கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டு தயாரிப்பான துப்பாக்கி ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர் 

கைது செய்யபப்ட்டவர்கள் 31 மற்றும் 28 வயதுடையவர்கள் என்றும் , இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

No comments