ஜக்கிய மக்கள் சக்தியினுள் பிளவு!
இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்கட்சி பிளவுகளை மீண்டும் எதிர்கொண்டுள்ளது.
கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல சிறுபான்மை அரசியல் கட்சிகள், கூட்டணியை விட்டு வெளியேறி தற்போதைய அரசாங்கத்தில் சேரத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பங்காளிகளாக உள்ள சிறுபான்மை கட்சிகள், சஜித் அணியின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்து மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளன.
கூட்டணி உருவாக்கப்பட்டபோது அடிப்படையாகக் கொண்ட அசல் கொள்கைகள் மற்றும் கொள்கை ஒப்பந்தங்களிலிருந்து பிரதான கட்சி விலகிச் செயல்படுவதாக சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, ரிசாhத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பழனி திகம்பரம் மற்றும் மனோ கணேசன் போன்ற சிறுபான்மை கட்சித் தலைவர்கள் கூட்டணியின் சில முடிவுகளைப் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.
எனினும் சில சிறுபான்மை கட்சித் தலைவர்கள், நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உள்நோக்கத்துடன், தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளதாக சஜித் தரப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment