யார் இந்த பெண்மணி?



இலங்கையின் வெவ்வேறு அரசியல் போராட்டங்கள் மற்றும் கட்சிப் பேரணிகளில் ஒரே பெண்மணி மாறுபட்ட அரசியல் அடையாளங்களுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

புகைப்படக் கலைஞர் ஒருவரின் கமெராவில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிக்கிய இந்தப் பெண்மணி, ஒரு சந்தர்ப்பத்தில் 'அரகலய' (மக்கள் போராட்டம்) போராட்டக்காரராகவும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தீவிர ஆதரவாளராகவும், அடுத்த கணமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) ஆதரவாளராகவும் காட்சியளிக்கின்றார்.

குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள புகைப்படக் கலைஞர், அந்தப் பெண்மணி தொடர்பில் பின்வருமாறு ஆழமான சமூகக் கருத்தொன்றைப் பதிவிட்டுள்ளார்:

"அவள் யாருடையவள் என்றோ, எங்கிருந்து வருகிறாள் என்றோ எனக்குத் தெரியாது. தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது தலைநகரின் வறிய சமூக அடுக்கைச் சேர்ந்தவளாகத் தெரிகிறாள். ஒருமுறை அவள் போராட்டக்காரியாக இருக்கிறாள்; சில வேளைகளில் ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ விசுவாசமாக இருக்கிறாள்; அடுத்த சந்தர்ப்பத்தில் மொட்டுக் கட்சியின் உபாசகியாக மாறுகிறாள்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எனது கமெரா கண்களில் சிக்கிய இவளைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல், ஒரு உருவகமாக  எடுத்துக்கொண்டால், அவள் பிரதிநிதித்துவப்படுத்துவது இந்த நாட்டின் 'பொதுமக்களை'யே ஆகும். இலங்கையின் அதிபெரும்பான்மையான மக்கள் அவளைப் போன்றவர்களே."

இலங்கை மக்களின் மாறிவரும் அரசியல் நிலைப்பாடுகளையும், வாழ்வாதாரப் போராட்டங்களுக்கு மத்தியில் அவர்கள் வெவ்வேறு அரசியல் முகாம்களில் தஞ்சமடையும் யதார்த்தத்தையும் இந்தப் பதிவு மிகத் துல்லியமாக வெளிப்படுத்துவதாகச் சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

No comments