பணமுதலைகள் மீது காவல்துறை கவனம்!



தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர்களது ஆசீர்வாதத்துடன் முளைத்துள்ள பணமுதலைகள் மீது காவல்துறை கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

தெற்கை தொடர்ந்து வடகிழக்கில் முளைத்துள்ள திடீர் பணக்காரர்கள் குறித்து இலங்கை காவல்துறை கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான வழிகளில் குறுகிய காலத்தில் பெருமளவிலான சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டின் கீழ், 25-க்கும் மேற்பட்ட நபர்கள் காவற்துறையினரின் தீவிர விசாரணை வலயத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிசொகுசு வீடுகள், நவீன சொகுசு வாகனங்கள் மற்றும் அதிகளவான தங்க நகைகளுடன் ஆடம்பர வாழ்க்கை எவ்விதத்தில் கிடைத்தன என்பது தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரும், விசேட காவற்துறை புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விரிவான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீட்டர் வட்டித் தொழில், அச்சுறுத்தி கப்பம் கோருதல் போன்ற சட்டவிரோத செயல்கள் மூலமே அவர்கள் இச்சொத்துக்களைச் சம்பாதித்துள்ளனர் என்பது தொடர்பிலான ஆரம்பகட்டத் தகவல்கள் காவற்துறையினருக்குக் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


No comments