இலங்கை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி?

 இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைக்காணும் நோக்கில், இரு நாடுகளினதும் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ளதாகக் இலங்கையின் கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிததுள்ளார்.

“இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் ஒரு விவகாரமாகும். அதற்காக இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் மட்டங்களில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஓர் அங்கமாக, எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி இலங்கைக் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் 



இந்தியாவுக்குச் சென்று, அந்நாட்டுக் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையைப் பயன்படுத்துதல், இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கான வழிமுறைகள் ஆராயப்படவுள்ளன.

இதனிடையே இந்தியாவுடனான இலங்கையின் பாதுகாப்பு உறவானது, புதுடெல்லியின் பரந்த அண்டை நாடுகளுடனான ஈடுபாட்டின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விவரித்துள்ளார்.


No comments