யாழ்.மாநகரசபையின் 25 கோடி சுருட்டப்பட்டுள்ளது?
யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான ஆகக் குறைந்தது 25 கோடி ரூபாய் பெறுமதியான சொத்தொன்று மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் முன் வீதி அல்லது இராசேந்திர பிரசாத் வீதியின் மேற்குப் புறமாகப் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடக் காணிக்குக் கிழக்காக அமைந்துள்ள, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உரித்தான 04 குளி 09 விஸ்தீரணம் கொண்ட காணியே இவ்வாறு மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளது.
ஆகக் குறைந்தது 25 கோடி ரூபாய் பெறுமதியான பொதுச் சொத்தொன்று இவ்வாறாக மோசடியாகக் கபளீகரம் செய்யப்பட்டமை தொடர்பில் மாநகர நிர்வாகம் காட்டும் அலட்சியப் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment