தீபாவளி : பாடசாலைகளிற்கு விடுமுறை!

 


தீபாவளித் திருநாளை முன்னிட்டு, அதற்கு மறுநாளான நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

இந்த விசேட விடுமுறைக்குப் பதிலாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும்.

அதேவேளை, வடக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் நவம்பர் 9ஆம் திகதி வழமைபோன்று இயங்கும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

No comments