கோத்தா சேர் தப்பித்து செல்வாரா?



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரப்பட்ட மனு மீதான தீர்ப்பு நவம்பர் 25 ஆம் திகதி அறிவிக்கப்படும்.

நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு சென்ற பின்னர் மீண்டும் இலங்கை திரும்புவாரா என்பது குறித்து கவலைகள் இருப்பதாகத் தெரிவித்தது.

இருப்பினும், அவர் வெளிநாடு சென்று மீண்டும் இலங்கை திரும்புவதை உறுதிசெய்வதற்குப் பொருத்தமான சட்டப்பூர்வ வழிமுறைகள் இருந்தால், பயணத் தடையை நீக்குவதற்குத் தான் ஆட்சேபனை தெரிவிக்கப்போவதில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அத்தகைய வழிமுறைகள் இல்லாத பட்சத்தில், அவரது வெளிநாட்டுப் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்தேகநபராகப் பெயரிடப்படாததால், பயணத் தடையை நீக்கிய பின்னர் அவர் மீண்டும் இலங்கை திரும்புவதை உறுதி செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதிவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது மருத்துவ சிகிச்சைக்காக கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூர் செல்ல விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments