காரைநகர் பிரதேச சபை தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ?
தமிழ் மக்கள் கூட்டணியின் முடிவை எதிர்த்து தவிசாளர் பதவியில் போட்டியிட்ட அக்கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் விஜயராசா பழனியாண்டிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் முதலாவது 16 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் , அடுத்த 16 மாதங்களுக்கான தவிசாளர் பதவிக்காக தமிழ் மக்கள் கூட்டணியினால், கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் முன்மொழியப்பட்டா ர்
அதன் அடிப்படையில் முதலாவது 16 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் , அடுத்த 16 மாதங்களுக்கான தவிசாளர் பதவிக்காக தமிழ் மக்கள் கூட்டணியினால், கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் முன்மொழியப்பட்டா
அவ்வேளை தமிழ் மக்கள் கூட்டணியின் இன்னுமொரு உறுப்பினரான விஜராசா பழனியாண்டி என்பவரும் , தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டமையால் , வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் , தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இருவருக்கும் சம வாக்கு கிடைக்கப்பெற்றதுள்ளது.
அதனை அடுத்து திருவுள சீட்டு மூலம் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் தவிசாளராக தெரிவானர்.
இந்நிலையில் தமது கட்சியின் முடிவுக்கு மாறாக தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட விஜராசா பழனியாண்டிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி அறிவித்துள்ளது.

Post a Comment