வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 2.71 ஏக்கர் தனியார் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பு
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியாருக்கு சொந்தமான 2.71 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் , கோணப்புலம் கிராமத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவித்த இராணுவத்தினர் இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலரிடம் அதற்கான ஆவணத்தை கையளித்தனர்.
பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வ ஆவணத்தை கையளித்தார்.
அதன்போது மேலதிக செயலர்களான கே. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி மற்றும் மேஜர் HMDN ஹேரத் ஆகியோரும் உடனிருந்தனர்.

Post a Comment