ஒரு வீதிக்கு இரண்டு அங்குரார்ப்பணம்:அரசியல் குழறுபடிகள்!




கிளிநொச்சியின் பூநகரியின் கரியாலைநாகபடுவான் பகுதியினில் வீதியொன்றின் புனரமைப்பிற்கு தமிழரசுக்கட்சியொரு நாளும் தேசிய மக்கள் சக்தி இன்னொரு நாளும் அங்குரார்ப்பண நிகழ்வு நடத்தி முடித்துள்ளன.

கரியாலைநாகபடுவானின் பல்லவன் வீதி 62 மில்லியன் ரூபா செலவில் நிரந்தர (கொங்கிறீட்) வீதியாக  புனரமைக்கும் வேலைத்திட்டம் பூநகரியின் பிரதேசசபை தவிசாளர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.  பிரதேசசபை உறுப்பினர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே கிராமிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழான பல்லவன் வீதி ,ஆரம்ப நிகழ்வு  இரண்டாவது தடவையாக பூநகரி அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும்,தேசிய மக்கள் சக்தி  நாடாளுமன்ற உறுப்பினருமான,இளங்குமரன் பங்குதலுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பூநகரி கிளின் சிறிலங்கா இணைப்பாளர், என பலரும் கலந்து கொண்டதாக கட்சி அறிவித்துள்ளது.


No comments