வீட்டாச்சு லீவு!



சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலகொடத்த அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இன்றுடன் 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

ஞானசார தேரரை விடுவிப்பதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக போராட்டத்தின் முக்கிய ஏற்பாட்டாளர்களில்  ஒருவரான உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

No comments