கிளிநொச்சி :ஐந்து இலட்சம் கவனிப்பு!



கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கீழ் வரும் பிரதேச செயலகங்களில் டித்வா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகள் தெரிவு முதல், தெரிவு செய்யப்பட்டவர்களிடம் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கீழ் வரும் பிரதேச செயலகங்களில் உதவி பெற வேண்டிய குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தகுதியற்றவர்கள் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டதாகவும், சிலரிடம் ஐந்து இலட்சம் ரூபா வரை பணம் கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 ஐந்து இலட்சம் ரூபா கோரப்பட்டதாகவும், அதில் ஒரு இலட்சம் ரூபாவை  வழங்கியதாகவும் வேறு சில பெண்களிடமும் பணம் கோரப்பட்டதாகவும், வீட்டுத்திட்டத்தின் ஒவ்வொரு தவணையாகப் பணம் கிடைக்கும்போதும் ஒரு இலட்சம் ரூபா வழங்குமாறு கேட்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

.

No comments