கஸ்ஸப தேரர் தற்கொலைப்படைக்கு தயாராம்!
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள வண. பலாங்கொட கஸ்ஸப தேரர், ஜனாதிபதி தற்போது பதவியிலிருந்து விலகி வீட்டிற்குச் செல்லத் தயாராக வேண்டும் என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் மத்தியில் கருத்துத் தெரிவித்த அவர், “அநுர ஆட்சியில் இருந்தது போதும். அவர் இப்போது வீட்டிற்குச் செல்லத் தயாராக வேண்டும். அநுரவை பதவியிலிருந்து அகற்ற சிங்கள மக்களுக்குத் திராணியில்லை என்றால், நமது உயிரைக் கொடுத்தாவது சிங்கள மக்கள் அநுரவை வீட்டிற்கு அனுப்பச் சித்தமாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment