சூனியங்கள் என்னை ஏதும் செய்யாது:அனுர!
களிமண் பொம்மைகளில் ஊசி குத்துவது போன்ற விசித்திரமான போராட்டங்களை முன்னெடுக்கும் சில எதிர்க்கட்சிக் குழுக்களின் செயற்பாடுகளை அநுர குமார திசாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை (31) நடைபெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தேசிய மாநாட்டில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
களிமண் பொம்மையில் ஊசி குத்துவதன் மூலம் மற்றொருவருக்கு வலியை ஏற்படுத்த முடியும் என நம்புவது எத்தகைய சிந்தனை என அவர் கேள்வியெழுப்பினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்படுத்திவரும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத சில குழுக்கள், வெறுப்பூட்டும் கருத்துகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் விசித்திரமான போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், ருவன்வெலிசாய தூபியை அரசாங்கம் மூழ்கடிக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தில், சூ னி ய சடங்குகள் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களின் பின்னணியில் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்

Post a Comment