சீன நட்பு வேண்டாம்:துரத்தும் இந்தியா!
சீன நிலைப்பாட்டை தொடர்ந்து பேண முற்படும் ஜனதா விமுக்தி பெரமுன என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியினை தமது கைகளினுள் வைத்துக்கொள்ள டெல்லி தொடர்ந்து பாடுபாட்டேவருகின்றது.
இந்நிலையில் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட தூதுக்குழுவினருடன் இந்தியத் தரப்பு முக்கிய சந்திப்புக்களை மீண்டும் நடாத்தியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜனதா விமுக்தி பெரமுன) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான தூதுக்குழுவினர், இந்தியத் தரப்புடன் உத்தியோகபூர்வ சிநேகபூர்வ சந்திப்பொன்றை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்திப்பில், இருதரப்புக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முன்னேற்றத்திற்கும் சுபீட்சத்திற்கும் ஒரு நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக இந்தியா எப்போதும் துணைநிற்கும் என்ற உறுதிப்பாடும் இச்சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (ஓ) தளத்தில் தகவல் வெளியிட்டுன்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதிநிதிகளை புதுடில்லியில் சந்தித்த பின்னரே அவர் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.
அண்மையிலும் டில்வின் சில்வா தலைமையிலான தூதுக்குழுவினர் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரினை சந்தித்திருந்தனர்.
அதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் கடந்த மாதம் இலங்கை வந்து திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment