ஞானசார தேரர் கைது !
தலைமறைவாகியிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்கீழ் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment