ஞானாவிற்கு காவியுடைய அணிவிக்க அதிகாரமில்லை?
ஞானசார தேரருக்கு மீண்டும் காவியுடையினை அணிவிப்பது தொடர்பில் உத்தரவு பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
அதேவேளை கொழும்பு, விகாரமாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த துறவிகளை வெளியேறுமாறு நேற்று (22) பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி அல்லது திருத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்று இன்று (23) நிராகரித்துள்ளது.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட தனியான கோரிக்கையையும் நீதிமன்று நிராகரித்துள்ளது.
இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி ஞானசார தேரருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி ஞானசார தேரருக்குச் காவியுடையை மீண்டும் முறைப்படி அணிவிப்பதற்கு அனுமதி வழங்குமாறு மகாநாயக தேரர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
வெவ்வேறு குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இன்னும் பல பௌத்த பிக்குகள் உள்ளனர். அப்படியென்றால், மேலதிக வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் முன்னர், அந்த பிக்குகள் அனைவருக்கும் மகாநாயக தேரர்களால் காவியுடை அணிவிக்கப்பட வேண்டும் என நீதிமன்று தெரிவித்துள்ளது.

Post a Comment