மன்னார் விபத்தில் ஒருவர் மரணம்!

 


மன்னார் மடுவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் கார் ஒன்றில் மடுத் தேவாலயம் நோக்கி பயணித்த நிலையில், மடுரோட்- பள்ளமடுச் சந்தி வீதியில், மடு ரோட் சந்தி ஊடாக மடுத் தேவாலயம் நோக்கி சென்றுகொண்டிந்த சந்தர்ப்பத்தில், மடுத் தேவாலயத்தில் இருந்து சில கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்பு அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பு, வீதியை விட்டு விலகி மரத்துடன் கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காயமடைந்த மூன்று பேரையும் மேலதிக சிகிச்சைக்காக பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஐம்பதிஐந்து (55) வயதுடைய சிரோமிலக்சிகா மாரிபெர்னாண்டோ என்ற பெண்ணின் சடலம், பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments