கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மீட்பு!


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடையது எனக் கருதப்படும் சீருடை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வளாகத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தினால் குழியொன்று தோண்டப்பட்டபோது, மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் சீருடை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீருடை குறித்த பகுதியில் எவ்வாறு புதைக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments