7 கோடி ரூபாய் லஞ்சம்:விளக்கமறியலில்!

 


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிறை வாழ்வு தொடர்கையில் அவரிற்குக்கு 7 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் கீதாஞ்சலி ஜானகி டி சொய்சா சிரிவர்தன என்பவரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று வியாழக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை டிரான்ஸ்வொர்க் சதுக்கம் எனப்படும் நிலத்தை நிறுவனம் விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும், நிறுவனத்திற்குத் தேவையான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவி வழங்குவதற்காகவும், தனியார் நிறுவனத்தினால் மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்சவுக்கு 7கோடி  ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டது தொடர்பிலேயே, சந்தேக நபர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே மருத்துவப் பரிசோதனை என்று கூறிக்கொண்டு சிங்கப்பூர் நோக்கி கடந்த 19 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும் நாமலின் தாயாருமான சிராந்தி ராஜபக்ச, வியாழக்கிழமை (24) பிற்பகல் வரை நாடு திரும்பவில்லை .

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறை நிதிப் புலனாய்வு விசாரணைப் பிரிவினால், கடந்த 16 ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த அவரிடம், இன்று வியாழக்கிழமை (24) ஆஜராகுமாறு கோரி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தைமை குறிப்பிடத்தக்கது.


No comments