கச்சத்தீவு இலங்கைக்கே:சந்திரசேகர்!
கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் மக்களைத் திசைதிருப்புவதற்காகவுமே கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கச்சத்தீவு இலங்கையின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டது என்பதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லை.
சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும்.
தமிழக அரசியல்வாதிகள் தங்கள்மீது எழுந்துள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், தங்களது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்கும் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் மீண்டும் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வரு இக்கோரிக்கைகளுக்கு பின்னால் எந்தவிதமான புதிய இராஜதந்திர அல்லது சட்டபூர்வ உண்மையும் இல்லை.

Post a Comment