வேலை அதிகமாம்:வீடு திரும்பிய காவல்துறை அதிகாரி!



இலங்கையில் போதைப்பொருள் வலைப்பினலுடன் தொடர்புடைய பலர் தொடர்ந்தும் கைதாகிவருகின்றனர்.

இந்நிலையில் தாங்க முடியாத பணி அழுத்தத்தைக் காரணம் காட்டி, பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி தனது பதவியை விட்டு விலகி வீடு திரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு, தனது பணிகளுடன் தொடர்புடைய அதிகப்படியான பணிச்சுமையையும் அழுத்தத்தையும் இனிமேலும் சமாளிக்க முடியாது என்று பொலிஸ் தகவல் புத்தகத்தில் ஒரு குறிப்பைப் பதிவு செய்திருந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்  இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.


No comments