தற்காலிக தலைவர்களிற்கெதிராக வழக்கு!
இலங்கை தமிழரசுக்கட்சியின் தற்காலிக தலைவர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோருக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் தற்போதைய தற்காலிக தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தற்காலிக தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தற்காலிக செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கினை நீதவான் பரிசீலித்ததை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
வடகிழக்கு தழுவிய வகையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் தரப்பினால் முன்;னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment