இன்றும் கோத்தா பாதுகாப்பு வீடு திரும்பினார்!
இன்றைய தினம் கைதாகலாமென்ற பரபரப்பின் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளார்.
மிக் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து அறிக்கை அளித்த பின்னர், கோத்தபாய ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய மிக் விமானக் கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, அவர் இன்று காலை; முன்னிலையாகி நீண்ட நேரம்த வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.
மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்சல் ரொசான் குணதிலக நேற்று (10) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment