தெஹிவளையில் - கை குண்டு!
தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கை குண்டுத்தாக்குதலில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 11 மற்றும் 17 வயதான இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.
எனினும், தெஹிவளையில் அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல், வேறு ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், தவறுதலாக அடுத்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.
தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் 55 வயதுடைய தந்தையும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளிகள் அருகிலுள்ள மற்றொரு வீட்டையே இலக்காகக் கொண்டு தாக்குதல் நடாத்தியதாகவும் அந்த வீடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவருடன் தொடர்புடையதாக தெரியவந்துள்ளது.
எனினும், கைக்குண்டு தவறுதலாக அருகிலிருந்த வீட்டின் மீது வீசப்பட்டதாகவும், அந்த வீட்டிற்குள் இருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் “தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் தொடர்ச்சியாக இடம்பெற்ற பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment