நாளைய தீர்ப்பு:நீதி தருமா?





ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான தீர்ப்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற ஆயத்தினால் நாளை செவ்வாய்கிழமை (22) அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி, மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைமை நீதிபதி), சுஜீவ நிஸ்ஸங்க, ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் அந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட எட்டு உயிர்மாய்ப்பு குண்டுதாரிகளுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை மற்றும் சதி செய்தமை உள்ளிட்ட பிரதான குற்றச்சாட்டுகள் உட்பட 23,270 குற்றச்சாட்டுகள் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வழக்கின் விசாரணையின் போது, பிரதிவாதிகளின் 10 ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றம் சாட்சிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், கத்திகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டு தயாரிக்கும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட 2,076 வழக்குச் சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட எட்டு குண்டுத் தாக்குதல்களில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 40 பேர் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். மேலும் 577 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments