கந்தரோடை விகாரைக்கு சென்ற புத்த சாசன அமைச்சர்
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த, புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவி சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள புராதன கந்தரோடை விகாரையை நேரில் பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் தொன்மையான சமய மற்றும் கலாசார மரபுகளையும், அவற்றுடன் தொடர்புடைய தொல்பொருள் பாரம்பரியங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.
அந்த வகையில், கந்தரோடை விகாரை வளாகத்தில் தொல்பொருள் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றின் வரலாற்று மற்றும் கலாசார பெறுமதியை எதிர்கால தலைமுறைகளுக்கும் பாதுகாப்பதுடன், அங்கு சமய நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.
அதன் போது, பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சேனரத் விக்கிரமசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

.jpg)
.jpg)
Post a Comment