நல்லூர் பிரதேச சபையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி


ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில்  இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அந்நிலையில் நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் ப.மயூரன் தலைமையில் நடைபெற்றது. 

சபை அமர்வின் ஆரம்பத்தில்  சபா மண்டபத்தில் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அக வணக்கத்துடன் தவிசாளர் , உறுப்பினர்கள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினர் 







No comments