மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியோரின் உடைமையில் ஐஸ் போதைப்பொருள்
கொட்டதெனியாவ, தொரொவ்வ பகுதியில் பேருந்துடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும், அதன் பின்னால் இருந்து பயணித்தவரும் காயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் பயணப் பைகளை பரிசோதித்த போது அதிலிருந்து 350 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 21 மற்றும் 25 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொட்டதெனியாவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment