செம்மணி - இன்றும் மூன்று சோதனைக்குழிகள் அகழ்வு ; இதுவரையில் 562 என்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுப்பட்டன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 53ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வு பணிகளின் போது, 562 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை எழுமாற்றாக கடந்த நாட்களில் 08 சோதனைக்குழிகள் அகழப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினமும் மேலதிகமாக மூன்று சோதனை குழிகள் அகழப்பட்டுள்ளது. அவற்றுக்குள் என்புக்கூடுகள் அடையாளம் காணப்படாத நிலையில், மேலும் 03 சோதனைக்குழிகளை அகழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Post a Comment