நான் தயாராக இருக்கிறேன் :பிரியந்த !
அரசியல்வாதிகள் என்னை பற்றி வெளியிடும் கருத்துக்கள் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நான் சமூக அநீதியையோ அல்லது அழிவையோ செய்யாததால், சிறப்பு பாதுகாப்பு இல்லாமலும் நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல முடியும்.
மக்களுக்கு சென்று பார்க்க முடியாத நிலை எனக்கு ஏற்படவில்லை, சமூகத்திற்கு பொய் கூறி அழிவை ஏற்படுத்திய அரசியல்வாதிகளுக்கே அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் எங்களுக்கு நல்ல சர்வதேச ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. அத்துடன் நாங்கள் முன்னெடுக்கும் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நாடுகள் சிறப்பு பாராட்டு தெரிவித்துள்ளன." என கூறி இருந்தார்.

Post a Comment