செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையினரின் வான்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் நால்வர் என 57 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

Post a Comment